Wednesday 1 March 2017

Pshycho-7

301 ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
302 நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
303 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை
304 எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
305 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
306 வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
307 தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
308 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
309 உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
310 உற்று நோக்கலின் படி - நான்கு
311 லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
312 சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
313 சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
314 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
315 கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
316 பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
317 மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
318 வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
319 கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
320 அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
321 அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
322 மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
323 எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
324 எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
325 குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
326 மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
327 சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
328 உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
329 உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
330 வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
331 பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
332 முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
333 மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
334 தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
335 குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
336 தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
337 எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
338 வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். குமரப் பருவம்.
339 மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
340 பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
341 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
342 மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
343 மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
344 உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
345 கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
346 முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
347 சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
348 ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
349 தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
350 ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.

No comments:

Post a Comment