Monday 28 November 2016

Tamil-book & author

#புகழ்பெற்ற #நூல்கள், :-
#நூலாசிரியர்கள்:
#பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு,பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி
-------------------------------------------------------------------------------------------------------------
#பாரதிதாசன் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு.
அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு,பிசிராந்தையார்.
------------------------------------------------------------------------------------------------------------
#அறிஞர் #அண்ணா - ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி,
ரங்கோன் ராதா, தம்பிக்கு, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம்,நல்ல தம்பி.
-----------------------------------------------------------------------------------------------------------
#கலைஞர் #மு.#கருணாநிதி - குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை
-----------------------------------------------------------------------------------------------------------
#கண்ணதாசன் -ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான்
காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை
----------------------------------------------------------------------------------------------------------
#புலவர் #குழந்தை - ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்
----------------------------------------------------------------------------------------------------------
#சுரதா - தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை
-------------------------------------------------------------------------------------------------------------
#வாணிதாசன் - கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம்.
------------------------------------------------------------------------------------------------------------
#நாமக்கல் #கவிஞர் - மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம்.
------------------------------------------------------------------------------------------------------------
#அருணகிரிநாதர் - திருப்புகழ்
-------------------------------------------------------------------------------------------------------------
#புகழேந்தி - நளவெண்பா
-------------------------------------------------------------------------------------------------------------
#சேக்கிழார் - பெரியபுராணம்
---------------------------------------------------------------------------------------------------------------
#கச்சியப்பர் - கந்தபுராணம்
-------------------------------------------------------------------------------------------------------------
#குமரகுருபரர் -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், நீதிநெறிவிளக்கம், மதுரைக்கலம்பகம்
------------------------------------------------------------------------------------------------------------
#உமறுபுலவர் - சீறாப்புராணம், சீதக்காத்தி நொண்டி நாடகம்
#ஒட்டக்கூத்தர் - தக்கையாப் பரணி, மூவருலா, ராஜராஜன் உலா,
குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்.
--------------------------------------------------------------------------------------------------------------
#ஔவையார் -மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி.
#இராமலிங்க #அடிகளார் - திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------
#ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி.
--------------------------------------------------------------------------------------------------------------
#கம்பர் - சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி.சிலை எழுபது, ஏர் எழுபது.
-------------------------------------------------------------------------------------------------------------
#திரிகூடராசப்பர் - குற்றாலக் குறவஞ்சி, தலபுராணம், அந்தாதி.
-------------------------------------------------------------------------------------------------------------
#வில்லிபுத்தூராழ்வார் -வில்லிபாரதம், சொக்கநாதர் உலா.
--------------------------------------------------------------------------------------------------------------
#அதிவீர ராமபாண்டியன் - நைடதம், வெற்றிவேட்கை.
-----------------------------------------------------------------------------------------------------------
வீரமா முனிவர் - தேம்பாவனி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம்
திருக்காவலூர்க் கலம்பகம், கலிவெண்பா.
------------------------------------------------------------------------------------------------------------
மீனாட்சி சுந்தரம்பிள்ளை- மனோன்மணீயம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
-----------------------------------------------------------------------------------------------------------
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை - இரட்சண்ய யாத்ரீகம்
----------------------------------------------------------------------------------------------------------
திரு.வி.க. -முருகர் அல்லது அழகு, பெண்ணின்பெருமை,பொதுமை வேட்டல், இளமை விருந்து.
------------------------------------------------------------------------------------------------------------
தேசிய வினாயகம் பிள்ளை - ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
கல்கி - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை
-------------------------------------------------------------------------------------------------------------
சாண்டில்யன் - மலைவாசல், கடல்புறா, யவனராணி, கன்னி மாடம்
------------------------------------------------------------------------------------------------------------
புத்தமித்திரர் - வீரசோழியம்
------------------------------------------------------------------------------------------------------------
ஐயனாரிதனார் - புறப்பொருள்
------------------------------------------------------------------------------------------------------------
அமிர்தசாகரர் - யாப்பெருங்கலம்
------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டாள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
-------------------------------------------------------------------------------------------------------------
மாணிக்கவாசகர் திருவாசகம்,திருக்கோவையார்,திருச்சிற்றம்பலக்கோவை
-------------------------------------------------------------------------------------------------------------
முடியரசன் - பூங்கொடி, காவிரிப் பாவை, வீரகாவியம்
------------------------------------------------------------------------------------------------------------
ராஜம் ஐயர் - கமலாம்பாள் சரித்திரம்
------------------------------------------------------------------------------------------------------------
மு.வரதராசனார் - கள்ளோ காவியமோ, அகல் விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை
----------------------------------------------------------------------------------------------------------
அண்ணாமலை செட்டியார் - காவடிச்சிந்து
வேதநாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம், பகுதிநூல் திரட்டு

Tamil-grammar

#தமிழ் #இலக்கணம் #அறிவோம்
#உவமைத்தொகை:
பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..
(எ.கா) கனிவாய்
மலரடி
'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
அதேபோல '#மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.
பெரும்பாலும் '#போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.
எ.கா
1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்
மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.
#உருவகம்:
உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா..அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.
அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.
அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.
'மலரடி' என்ற சொல்லை '#அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.
#விளக்கம்:
ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே '#மலர்முகம்'.இது உவமைத் தொகை.
இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்..(புரிதலுக்காகவே இவ்விளக்கம்)
அவ்வளவுதான் தோழர்களே..இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா..
#எடுத்துக்காட்டு:
#உவமைத்தொகை. #உருவகம்
மலர்முகம். முகமலர்
மலர்க்கை. கைமலர்
தாய்மொழி. மொழித்தாய்
கயல்விழி. விழிகயல்
அன்னைத்தமிழ். தமிழன்னை
மலர்விழி. விழிமலர்
#இரட்டைக்கிளவி:
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.
(எ.கா)
#சலசல, #கலகல
மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.
#அடுக்குத்தொடர்:
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.
(எ.கா)
#பாம்பு #பாம்பு,#வருக #வருக
மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளைத் தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.
#ஈறுகெட்ட #எதிர்மறைப் #பெயரெச்சம்:
ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா)
வாடா மலர்
தேரா மன்னன்
பொய்யா மொழி
பேசா வாய்
சிந்தா மணி
இதில் வாடா, தேரா, பொய்யா, பேசா, சிந்தா போன்றவை #ஈறுகெட்ட #எதிர்மறைப் #பெயரெச்சங்கள் ஆகும்.
'#' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.
எனவே எளிதாக கண்டறியலாம்.

Tamil-grammar

#தமிழ் #இலக்கணம் #அறிவோம்
#எண்ணும்மை:
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.
(எ.கா)
அல்லும் பகலும்
காதலும் கற்பும்
அவனும் இவனும்
#உம்மைத்தொகை:
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.
(எ.கா)
அவன் இவன்
இரவு பகல்
இராப்பகல்
எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.அதுவே மரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.
#உரிச்சொற்றொடர்:
ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.
(எ.கா) மாநகரம்
அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம்.இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்..
1.சால 2.உறு
3.தவ 4.நனி
5.கூர் 6.கழி
7.கடி 8.மா
9.தட
மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக்கூடிய சொற்கள்.எனவே கேட்கப்படும் #உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் ஆரம்பிக்கும்..
(எ.கா)
தடக்கை
தவப்பயன்
உறுபடை
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்
1.வேர்ச்சொல்
2.பெயரெச்சம்
3.வினையெச்சம்
4.வினையாலணையும்
பெயர்
5.வினைமுற்று
6.தொழிற்பெயர்
1.தா
2.தந்த
3.தந்து
4.தந்தவன்
5.தந்தான்
6.தருதல்
1.செல்
2.சென்ற
3.சென்று
4.சென்றவன்
5.சென்றான்
6.செல்தல்
1.உண்
2.உண்ட
3.உண்டு
4.உண்டவன்
5.உண்டான்
6.உண்ணல்
1.காண்
2.கண்ட
3.கண்டு
4.கண்டவன்
5.கண்டான்
6.காணுதல்
1.கூறு
2.கூறிய
3.கூறி
4.கூறியவன்
5.கூறினான்
6.கூறுதல்

physics-density

#இயற்பியல். #அடர்த்தி #விளக்கம்
#அடர்த்தி:-
#இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும்.
ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது.
எனவே #தங்கத்தின் "#அடர்த்தி" #வெள்ளியின் அடர்த்தியை #விட #கூடுதலானது.
அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
ρ = m/V
SI அலகுகள்:
ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3}
m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg)
V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3)
நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும்.
அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்)
அல்லது
கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும்.
சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம்.
#SI #அலகில் #கி.கி/மீ3 என #எழுதுவது #வழக்கம்.
பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்:
#பொருள் #அடர்த்தி (கி.கி/மீ3)
திடம்
இரிடியம். 22650
ஆஸ்மியம் 22610
பிளாட்டினம் 21450
தங்கம் 19300
டங்க்ஸ்டன் 19250
யுரேனியம் 19050
பாதரசம் 13580
பலேடியம் 12023
ஈயம் 11340
வெள்ளி 10490
செப்பு 8960
இரும்பு 7870
வெள்ளீயம் 7310
டைட்டேனியம் 4507
வைரம் 3500
அலுமீனியம் 2700
மக்னீசியம் 1740
#திரவம்:-
கடல் நீர் 1025
நீர் 1000
ஈத்தைல்ஆல்கஹால் 790
பெட்ரோல் 730
Aerogel 3.0
#எடுத்துக்காட்டு:- #காற்று 1.2
வளியின் அடர்த்திρ vs. வெப்பநிலை °C
T in °C ρ கிகி/மீ³ இல்
- 10 1.341
- 5 1.316
0 1.293
+ 5 1.269
+ 10 1.247
+ 15 1.225
+ 20 1.204
+ 25 1.184
+ 30 1.164

Thursday 24 November 2016

Abbreviation

Important Abbreviations from Current Affairs

• KCC – Kisan Credit Card
• KVIC – Khadi and Village Industries Corporation
• KYC – Know your customer
• LAMPS – Large Sized Adivasi Multipurpose societies
• LERMS – Liberalised Exchange Rate Management System
• LIC – Life Insurance Corporation of India
• MCA – Ministry of Company affairs
• MIS – Management Information System
• MICR – Magnetic Ink Character Recognition
• NABARD – National Bank for Agriculture and Rural Development
• NBFC – Non Banking Finance Companies
• NEFT – National Electronic Funds Transfer
• NPA – Non Performing assets
• NRE – Non Resident External account
• NRI – Non Resident Indian
• NSE – National Stock Exchange
• OLTAS – Online tax accounting system
• OMO – Open market operations
• PACS – Primary Agricultural Credit Societies
• PDO – Public Debt Office
• PIN – Personal Identification Number
• QIB – Qualified Institutional Buyers
• RBI – Reserve Bank of India
• RDBMS – Relational Database Management System
• REC – Rural ElectrificationCorporation
• RFC – Resident Foreign Currency
• RIDF – Rural Infrastructure Development Fund
• RRB – Regional Rural Bank
• RTGS – Real Time Gross Settlement
• RWA – Risk Weighted Assets
• SBI – State Bank of India
• SCB – Scheduled Commercial Bank
• SDR – Special Drawing Rights
• SEBI – Securities and Exchange Board of India
• SFMS - Structured Financial Messaging Services
• SHG – Self Help Group
• SIDBI – Small Industries Development Bank of India
• SIDC – State Industrial Development Corporation
• SJSRY –Swarna Jayanthi Shahari Rozgar Yojana
• SLR – Statutory Liquidity Ratio
• SLRS – Scheme for Liberation and Rehabilitation of Scavangers
• SMERA – SME rating agency of India Limited
• SSI – Small Scale Industries
• SME – Small and Medium Enterprises
• SSSBE – Small Scale Service and Business Enterprises
• UTI – Unit Trust of India
• WPI – Wholesale Price Index
• YTM – Yield to maturity
• LAB – Local Area Banks
• ALM – Asset Liability Management
• ANBC – Adjusted Net Bank Credit
• ASBA – Applications supported Bank accounts
• BOE – Bill of Exchange
• CASA – Current and savings accounts
• CBLO – Collateralised Bank Lending Obligations
• CIBIL – Credit Information Bureau of India Limited
• DPG – Deferred Payment Guarantee
• DPN – Demand Promissory Note
• DRAT – Debt Recovery Appellate tribunal
• DRI – Differential Rate of Interest
• DSCR – Debt Service Coverage Ratio
• EDI – Electronic Data Interchange
• EMI – Equated Monthly Instalments
• EPS – Earnings Per Share
• ESOP – Employee Stock Options
• FEDAI – Foreign Exchange Dealers Association of India
• FFMC – Full Fledged Money Changers
• FOB – Free on Board
• LIBOR – London Inter Bank Operations Rate

5 year plans-shortcut

INDIAN ECONOMY (SHORTCUTS )
FIVE YEAR PLANS:(Important facts from First to Eleventh five year plan)

1) FIRST FIVE YEAR PLAN (1951 -56)

SHORTCUT: SIPCOT

S - SOCIAL SERVICE
I - INDUSTRY
P - POWER
Co - Communication
T - Transport

2) SECOND FIVE YEAR PLAN (1956 -61)

SHORTCUT : MADRAS

M - Mahalanobis Model
A - Atomic Energy Commission
D - Durgapur steel company, Tata Inst of Fundamental Research
R - Rourkela Steel Company, Rapid Industrialisation
A - Agriculture
S - Socialistic Pattern of Society

3) THIRD FIVE YEAR PLAN (1961-66)

SHORTCUT : SAD

S - Self Reliance
A - Agriculture
D - Development of Industry

5) FIFTH FIVE YEAR PLAN  (1974-79)

SHORTCUT : PSTM (Persons Studied in Tamil Medium)

P - Poverty Eradication
S - Self reliance
T - Twenty Point Programme
M - Minimum Need Programme

6) SIXTH FIVE YEAR PLAN (1980-85)

SHORTCUT : MAIL

M - Management
A - Agriculture production
I - Industry production
L - Local Development Schemes

7) SEVENTH FIVE YEAR PLAN  (1985-90)

SHORTCUT : EFGH (the alphabets)

E - Employment generation
F - Foodgrain production was doubled
G - Jawahar Rozgar Yojana (1989)
H - Hindu rate of Growth

8) EIGHTH FIVE YEAR PLAN  (1992-97)

SHORTCUT : LPG

L - Liberalisation
P - Privatisation
G - Globalisation

9) NINTH FIVE YEAR PLAN  (1997-2002)

SHORTCUT : ESPN

E - Employment for Women, SC's and ST's
S - Seven Basic minimum service
P - Panchayat Raj Institutions, Primary Education, Public Distribution System
N - Nutrition Security

11) ELEVENTH FIVE YEAR PLAN  (2007 -2012)

SHORTCUT : TEACHERS

T - Telecommunicatons (2G)
E - Electricity, Environment Science
A - Anemia
C - Clean water
H - Health education
E - Environment Science
R - Rapid growth
S - Skill Development

History-Vedhic period

வேத காலம் பற்றி சில தகவல்கள்:-
வேதம் என்ற சொல்லுக்கு பொருள் - அறிவு
வேதகாலங்கள் வகைகள் - இரண்டு (முன் வேத காலம், பின் வேத காலம்)
முன் வேத காலம் வேறு பெயர் - ரிக் வேத காலம்
வேதங்களில் மிக பழமையானது - ரிக்
ரிக் வேதத்தில் உள்ள பாகங்கள் - 10
ரிக் உள்ள பாடல்கள் - 1028
ரிக் வேத காலம் - கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரை
பல குடும்பங்கள் இணைந்து உருவானது - கிராமங்கள்
கிராமங்கள் தலைவர் - கிராமணி
பல கிராமங்கள் இணைந்து உருவானது - விஸ் (குழுக்கள்)
பல விஸ்கள் இணைந்து உருவானது - ஜனா
ஜனா தலைவன் - இராசன்
வேத காலத்தில் இராசன் என அழைக்கப்பட்டவர் - அரசன்
இரானின் நிர்வாகத்திற்கு உதவி செய்தவர்கள் - புரோகிதர்
இரானின் படை தலைவராக இருந்தவர்கள் - ராஜகுரு, சேனானி
வேதகாலத்தில் இருந்த அமைப்பு - சபா, சமிதி
வேதகாலத்தில் கல்வி கற்ற பெண்கள் - லோபமுத்திரா, விஸ்வவாரா, கோஷா, சிகாதா, நிவாவாரி, அபலா
வேதகாலத்தில் பயன்படுத்திய நாணயம் - நிஷ்கா
வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பானம் - சோமபானம், சுரா பானம்
பார்லி செடியில் இருந்து எடுக்கப்பட்ட பானம் - சுரா
பெண்கள் அணிந்த உள்ளாடைகள் பெயர் - வசாஸ்
பெண்கள் அணிந்த மேலாடை பெயர் - அதிவாசாஸ்
பெண்கள் இடுப்பில் அணிந்த ஆடை பெயர் - நிவி
முன் வேதகாலத்தில் மக்கள் வணங்கிய கடவுள் - அக்னி, வாயு, சூரியன்
பின் வேத காலம் வேறு பெயர் - இதிகாச காலம்
பின் வேதகாலத்தில் காலம் - கி.மு. 1000 முதல் கி.மு. 600 வரை
இதிகாசங்கள் என்று அழைக்கப்படுவது - இராமாயணம், மகாபாரதம்
பின் வேதகாலத்தில் இருந்த வேதங்கள் - யஜூர், சாம, அதர்வண
பின் வேதகாலத்தில் அரசர்கள் சூட்டிக் கொண்ட பெயர்கள் - ஏக்ராட், சாம்ராட், சர்வபௌமா
பின் வேதகாலத்தில் வர்ணம் என்று அழைக்கப்படுவது - சாதி
பின் வேத காலத்தில் கல்வி கற்ற பெண்கள் - கார்கி, மைத்ரேயி
பின் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சதமானா
பின் வேத காலத்தில் கல்வி முறை - குருகுல கல்விமுறை
பின் வேத காலத்தில் வணங்கிய கடவுள்கள் - பிரஜாபதி, பசுபதி, விஷ்ணு, கிருஷ்ணன்
அரசர் உயர்ந்த நிலையினை பெற ஏற்படுத்தும் யாகம் - ராஜசூயாகம்
அடிப்படை வேதங்கள் - 4
ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
யஜூர் வேதம் - சாஸ்திரங்கள்
சாம வேதம் - இசை
அதர்வண வேதம் - பிள்ளி, சூனியம்
உப வேதங்கள் - 4
ஆயுர்வேதம் - மருத்துவம்
தனுர் வேதம் - சண்டை (அ) போர் கலை
கந்தர்வ வேதம் - பாடல் கலை
சில்பவேதம் - கட்டடக் கலை

Wednesday 23 November 2016

Sanskrit vs tamil-23.11.16

நம்மை அறியாமலேயே  நாள்தோறும்
பேசும் சமஸ்க்ருத சொற்கள் சில...

அ[தொகு]

அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு

ஆ[தொகு]

ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி

இ[தொகு]

இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை

ஈ[தொகு]

ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை

உ[தொகு]

உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்

ஐ[தொகு]

ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை

க[தொகு]

கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி

ச[தொகு]

சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்

த[தொகு]

தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு

ந[தொகு]

நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

ப[தொகு]

பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல்

ம[தொகு]

மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்

ய[தொகு]

யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி

ர[தொகு]

ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை

ல[தொகு]

லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்

வ[தொகு]

வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்

ஜ[தொகு]

ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்

ஸ[தொகு]

ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்

இனிய காலை வாழ்த்துக்கள்........

Tuesday 22 November 2016

science-hydrocorbon 22.11.16

அறிவியல் சம்பந்தமான தகவல்கள் பாலிமர்கள், வாயுக்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் பற்றிய தகவல்கள்:-
1. பாலிமர்கள் பற்றிய தகவல்கள்:-
⚗ ஒரே மூலக்கூறு பலமுறை தொடர்ந்து அமைவதே - பாலிமர்
⚗ செல்லுலோஸ், ஸ்டார்ச் போன்றவை - இயற்கை பாலிமர்கள்
⚗ ரப்பர் என்பது ஐசோப்பிரின் என்பதன் - இயற்கை பாலிமர்
⚗ சல்ஃபரோடு ரப்பரை சேர்த்து சூடாக்குவது - வல்கனைசேஷன்
⚗ வல்கனைசேஷன் முறையை கண்டுபிடித்தவர் - குட் இயர்
⚗ ரப்பரை கடுனமாக்கும் முறை - வல்கனைசேஷன்
⚗ முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் - செல்லுலாய்டு
⚗ செல்லுலாய்டைக் கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் பார்கிஸ்
⚗ புகைப்படம், திரைப்பட பிலிம்கள் செய்ய பயன்படுவது - செல்லுலாய்டு
⚗ பெரும்பாலான பிளாஸ்டிக்குகளில் உள்ள பாலிமர் - ரெசின்
⚗ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இழை - நைலான்
⚗ நைலான் கண்டுபிடித்தவர் - வாலஸ் காரோத்தர்ஸ் (1937)
⚗ நைலான் கலவை - ஹெக்ஸாமெத்திலின் டைஅமின் + அடிப்பிக் அமிலம்
⚗ சுவிட்சுகள் செய்ய பயன்படுவது - பேக்லைட்
⚗ பேக்லைட் கண்டுபிடித்தவர் - பேக்லான்ட்
⚗ நைலான் என்பது ஒரு - பாலி அமைடு
⚗ பேக்லைட் கலவை - பீனால் + பார்மால்டிஹைடு
⚗ Compact disc (C.D.) செய்ய பயன்படும் பாலிமர் - பாலிகார்பனேட்
⚗ ஒட்டாத சமையல் கலன்களில் பூசப்படும் பாலிமர் - டெஃப்லான்
⚗ செயற்கை பட்டு - ரேயான்
⚗ குழாய்கள் செய்ய பயன்படும் பாலிமர் - பாலிவினைல் குளோரைடு
⚗ டெர்லின் கலவை - எத்திலீன் கிளைக்கால் + டெட்ராதாலிக் அமிலம்

2. வாயுக்கள்:-
⚗ Gas பலூன்களில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம்
⚗ நீர் வாயுவில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
⚗ உற்பத்தி வாயுவில் காணப்படும் வாயுக்கள் - நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
⚗ இயற்கை எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் - கார்பன்-டை-ஆக்சைடு, ஹைட்ரஜன்
⚗ சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் - மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு
⚗ நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக வாயு - மீத்தேன்
⚗ சதுப்பு நில வாயு - மீத்தேன்
⚗ போபாலில் கசிந்த விஷ வாயு - மீதைல் ஐஸோயனைடு
⚗ ஜப்பான் சுரங்க பாதை விபத்துக்கு காரணமாக விஷ வாயு - சரீன்
⚗ ஓஸோனில் ஓட்டை விழக் காரணமான வாயு - குளோரோ புளூரோ கார்பன்
⚗ சாண எரிவாயுவில் காணப்படும் வாயு - மீத்தேன்
⚗ அமில மழைக்கு காரணமான வாயுக்கள் - சல்பர் - டை- ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு
⚗ சிரிப்பூட்டும் வாயு - நைட்ரஸ் ஆக்ஸைடு
⚗ வளிமண்டலத்தில் வாயு - நைட்ரஜன்
⚗ தீயணைக்கப் பயன்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
⚗ தீயணைப்பு கருவியில் இருப்பது - சோடியம் பை கார்பனேட்
⚗ சோடா பானங்களில் அதிகமுள்ளது வாயு - கார்பன் டை ஆக்சைடு
⚗ உலர் பனிக்கட்டி என்பது - திட கார்பன் டை ஆக்சைடு
⚗ பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது - எத்திலீன்
⚗ அழுகிய மீன் மணமுள்ள வாயு - பாஸ்பீன்
⚗ அழுகிய முட்டை மணமுள்ள வாயு - ஹைட்ரஜன் பெராக்சைட்
3.ஹைட்ரோகார்பன் வகைகள்:-ஹைட்ரோகார்பன் - பொது வாய்பாடு - பொதுப்பெயர்
⚗ அல்கேன் - CnH2n+2 - பாரஃபின்
⚗ அல்கீன் - CnH2n - ஒலிஃபின்
⚗ அல்கைன் - CnH2n-2 - அசிட்டிலின்
🔰அல்கேன் - மூலக்கூறு வாய்பாடு
⚗ மீத்தேன் - CH4
⚗ ஈத்தேன் - C2H6
⚗ புரப்பேன் - C3H8
⚗ பியூட்டேன் - C4H10
⚗ பென்டேன் - C5H12
⚗ ஹெக்சேன் - C6H14
🔰அல்கீன் - மூலக்கூறு வாய்பாடு
⚗ மீத்தீன் - உலகில் காணப்படுவதில்லை
⚗ ஈத்தீன் - C2H4
⚗ புரப்பீன் - C3H6
⚗ பியூட்டீன் - C4H8
⚗ பென்டீன் - C5H10
⚗ ஹெக்சீன் - C6H12
🔰அல்கைன் - மூலக்கூறு வாய்பாடு:
⚗ மீத்தைன் - C2H2
⚗ 1 - புரப்பைன் - C3H4
⚗ 1 - பியூட்டைன் - C4H8
⚗ 2 - பியூட்டைன் - C4H8

Sunday 20 November 2016

Water-20.11.16

நீர் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
💦 நீரின் அறிவியல் பெயர்  - ஆக்சிஜன் ஹைட்ரைடு, ஹைட்ரஜன் ஆக்ஸைடு
💦 நீரின் அறிவியல் வாய்ப்பாடு - H2O
💦 நீரில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எடை இயைபு - 1:8
💦 நீரில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் கன அளவு இயைபு - 1:2
💦 ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உருகுநிலை - 0°C (அ)32°F
💦 நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - 537 கலோரி
💦 நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம் - 79.7 கலோரி
💦 ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட நீர் குளிர்ச்சிக்கு காரணம் - நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம்
💦 பாலைவனத்தில் கானல் நீர் போல தெரிய காரணம் - முழு அக எதிர்ஒளிப்பு
💦 இட்லி விரைவாக வேகக் காரணம் - நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
💦 சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுவது - நீர்
💦 நீரின் கொதிநிலை - 100°C / 212°F / 373K
💦 நீரின் உறைநிலை - 0°C / 32°F / -273K
💦 அழுத்த சமையல் களன்  (பிரஷர் குக்கர்) கொதிநிலை - 120°C
💦 பூமியின் நீரில் பங்கு - 71%
💦 மனித உடலில் நீர் சதவீதம் - 65%