Thursday 17 November 2016

chemistry- chemical bond 18.11.16

வேதிப்பிணைப்பு பற்றிய சில தகவல்கள் :-
⚗ வேதிப்புணைப்பின் வகைகள் - 3
1. அயனி பிணைப்பு
2. சகப்பிணைப்பு
3. ஈதல் சகப்பிணைப்பு
1. அயனி பிணைப்பு:
⚗ எலக்ட்ரான் பரிமாற்றத்தின் விளைவாக உருவாகும் நேர் அயனியும் (+) எதிர் அயனியும் (-) ஒன்றாக கொன்று நிலை மின்னியல் கவர்ச்சி விசையால் இணைவதனல மூலம் உருவாகும் பிணைப்பே - அயனி பிணைப்பு
⚗ அயனி பிணைப்பு பெற்றுள்ள சேர்மங்கள் - அயனிச் சேர்மங்கள்
⚗ அயனிப்பிணைப்பு உருவாக தேவையான நிபந்தனை
1. இணைதிற எலக்ட்ரான்கள் எண்ணிக்கை
2. நிகர ஆற்றல் குறைவு
3. எலக்ட்ரான் மீதுள்ள கவர்ச்சி விசை
⚗ அயனி பிணைப்பு (எ.கா) சோடியம் குளோரைடு உருவாதல், மக்னீசியம் குளோரைடு உருவாதல்
⚗ அயனிச் சேர்மங்கள் பொதுவான பண்புகள்:
✔ அறை வெப்பநிலையில் திண்மங்கள்
✔ அதிக உருகு நிலை கொண்டது
✔ அதிக கடினத் தன்மை உடையது
✔ எளிதில் நொறுங்கும் தன்மை உடையது
✔ நீரில் நன்கு கரையும்
✔ மின்சாரத்தை நன்கு கடத்தும்
✔ வேகமாக வினைகளில் ஈடுபடுகின்றன
2. சகப்பிணைப்பு:-
⚗ பங்கீட்டுக்கு உள்ளான இரு எலக்ட்ரான்களால் ஏற்படும் பிணைப்பு - சகப்பிணைப்பு
⚗ சகப்பிணைப்பு வேறுபெயர் - எலக்ட்ரான் இணை பிணைப்பு
⚗ சகப்பிணைப்பு பெற்றுள்ள சேர்மங்கள் - சகப்பிணைப்பு சேர்மங்கள்
⚗ சகப்பிணைப்பு உருவாக தேவையான நிபந்தனை
1. இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
2. சமளவு எலக்ட்ரான் கவர்ச்சி விசை
3. சம அளவில் எலக்ட்ரான்களை பங்கிடுதல்
⚗ சகப்பிணைப்பு சேர்மத்தின் (எ.கா.) ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதல், குளோரின் மூலக்கூறு உருவாதல்
⚗ சகப்பிணைப்பு சேர்மங்கள் பொதுவான பண்புகள்:-
✔ அறை வெப்பநிலையில் வாயுக்கள், நீர்மங்கள் (ம) திண்மங்கள்
✔ குறைந்த உருகுநிலை கொண்டது
✔ கடினத் தன்மையற்ற திண்மங்கள்
✔ எளிதில் உடையும் தண்மையை பெற்றிருக்கின்றன
✔ கரிம கரைப்பான்களான பென்சீன், டொலுவீன் ஆகியவற்றில் கரைகின்றன
✔ மின்சாரத்தை கடத்துவதில்லை
✔ குறைந்த வேகத்தில் வினையில் ஈடுபடுகின்றன
3. ஈதல் சகப்பிணைப்பு:-
⚗ ஒரு சகப்பிணைப்பில், பிணைப்புக்குத் தேவையான இரண்டு எலக்ட்ரான் களும், இரண்டு அணுக்களின் ஏதேனும் ஒரு அணுவால் மட்டுமே வழங்கப்பட்டிருப்பின் அது - ஈதல் சகப்பிணைப்பு
⚗ ஈதல் சகப்பிணைப்பு (எ.கா.) அம்மோனியாவுடன் ஹைட்ரஜன் அயனி இணைந்து அம்மோனியம் அயனி உருவாகிறது.

No comments:

Post a Comment