Tuesday 8 November 2016

Constitution

1. 36வது அரசியலமைப்புத் திருத்தம் சிக்கிம் மாநிலத்தை எத்தனையாவது மாநிலமாக மாற்றியது – 22வது மாநிலமாக
2. நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்பின் மீது பாராளுமன்றம் சட்டமியற்ற வழி செய்யும் ஷரத்து – ஷரத்து 250
3. அரசியலமைப்பில், 74 -வது திருத்தம், Art. 243வது ஷரத்து குறிப்பிடுவது – நகர்பாலிகா
4. பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ள தலைப்பாகும் – பொதுப் பட்டியல்
5. குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்தின் கால வீச்சு – 6 வாரங்கள்
6. பாராளுமன்றத்தின் இரு சபைகளில் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் முரண்பாடு ஏற்பட்டால் எந்த சபைக்கு அதிகாரம் அதிகமாக உள்ளது – இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது.
7. உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும் – 6 மாதங்களுக்குள்
8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை – 3
9. இந்திய அரசியலமைப்பு 395 ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.
10. புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் – ஜனவரி 26, 1950
11. அரசியலமைப்பு இந்தியாவை – மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.
12. முகவுரையைத் திருத்திய அரசியலமைப்பின் திருத்தம் – 42வது திருத்தம்.
13. இந்திய குடியரசுத் தலைவரே அட்டர்னி ஜெனரலை நியமிக்க வழி செய்யும் ஷரத்து – ஷரத்து 76
14. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து – ஷர்தது 320
15. இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை – நர்கீஸ் தத்
16. அதிகாரப் பட்டியல்களில் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது – மத்திய அரசு வசம்
17. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அலுவலரை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்.
18. மதசார்பின்மை என்பது குறிப்பது – எல்லா மதமும் சமம்
19. பத்திரிக்கைச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
20. பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராகவும் பேசவும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாது. அவர் அட்டர்னி ஜெனரல்
21. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் – பாராளுமன்றம்
22. குடியரசுத் தலைவர் இதுவரை மூன்று முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்.
23. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் – பாராளுமன்றம்
24. பாராளுமன்றத்தில் ஒரு சபையில் தலைமை வகித்தாலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாதவர் – துணை குடியரசுத் தலைவர்
25. மக்களவையில் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவது – நிதியமைச்சர்
26. பாராளுமன்ற அரசாங்க முறையில் யார் கேபினெட் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது – பிரதமர்
27. இந்தியாவில் பொதுநல அரசை நிறுவ மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழிகாட்டும் நன்னெறிக் கோட்பாடுகள் – அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
28. பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் – 30 உறுப்பினர்கள்
29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கத் தேவைப்படுவது – அரசியலமைப்பு திருத்தம்
30. மக்களவையின் தலைமைச் செயலகம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழே இயங்குகிறது – சபாநாயகர்

No comments:

Post a Comment