Monday 14 November 2016

potany-15.11.16

தாவரங்களின் நீராவிபோக்கு மற்றும் உணவூட்டம் முறைகள் பற்றிய சில தகவல்கள்:-
(1.) தாவரங்களில் நீராவி போக்கு:-
🌱 தாவரங்களில் நீராவிபோக்கு வகைகள் - 3
1. இலைத்துளை
2. கியூட்டிக்கள்
3. பட்டைத்துளை
1. இலைத்துளை நீராவிபோக்கு:
🌿 அதிக அளவில் நீராவி போக்கு நடைபெறும்
🌿 காப்பு செல்கள் மூலம் நடைபெறுகிறது
2. கியூட்டிக்கிள் நீராவிபோக்கு:
🌿 இலையின் புறத்தோலின் மீது காணப்படும் மெழுகுப்பூச்சு - கியூட்டிக்கிள்
🌿 இலையின் புறத்தோலில் கியூட்டிக்கிள் தடிமன் அதிகரிக்கும் போது நீராவிபோக்கு வேகம் குறைகிறது.
3. பட்டைத்துளை நீராவிபோக்கு:
🌿 பட்டைத்துளை அல்லது லென்டிக் செல் எனப்படும்.
🌿 மிக குறைந்த அளவு நீராவிபோக்கு நடைபெறுகிறது.
🌴 இலைகள் மூலம் நீராவிபோக்கு நடைபெறுகிறது என்பதை விளக்கும் சோதனை - மணிஜாடி சோதனை
🌴 நீராவிபோக்கு பாதிக்கும் காரணிகள் - ஒளி, வெப்பநிலை, காற்று, மண்ணில் காணப்படும் நீர் அளவு, இலைத்துளைகளின் எண்ணிக்கை, இலைப்பரப்பு
(2.) தாவரங்கள் உணவூட்டம் முறைகள்:-
(i). தற்சார்பு ஊட்டமுறை
(ii). பிறச்சார்பு ஊட்ட முறை
(i). தற்சார்பு ஊட்ட முறை வகைகள் - 2
1. ஒளித்தற்சார்பு உயிரிகள்:
🌿 அனைத்து பசுந்தாவரங்கள் இவ்வகையான ஊட்டமுறை நடைபெறுகிறது
🌿 எ.கா. பசுந்தாவரங்கள், பசும் கந்தக பாக்டீரியா, ஊதா கந்தக பாக்டீரியா
2. வேதித்தற்சார்பு உயிரிகள்:
🌿 இது நைட்ரோசோமோனாஸ் தாவரத்தில் நடைபெறுகிறது.
(ii) பிறசார்பு ஊட்டமுறை வகைகள் - 2
1. சாறுண்ணி வகை ஊட்ட முறை
2. ஒட்டுண்ணி வகை ஊட்ட முறை
1. சாறுண்ணி வகை ஊட்ட முறை:
🌿 இறந்த அல்லது உயிரற்ற கூட்டுப் பொருள்களிலிருந்து உணவை பெறும் தாவரங்கள் - சாறுண்ணி தாவரங்கள்
🌿 எ.கா. மியூக்கர், பேசில்லஸ், மானோட்ரோபா
2. ஒட்டுண்ணி வகை ஊட்ட முறை :
🌿 தனக்கு தேவையான உணவை மற்ற உயிரியின் உடலில் இருந்து பெற்று கொள்கிறது.
🌿 எ.கா. சாந்தோமோனாஸ் சிட்ரி, செர்க்கோஸ்போரா பெர்னேட்டா, கஸ்குட்டா
கூட்டுயிரி உணவூட்டம் முறை:-
🌿 எ.கா. லைக்கன், மைக்கோரைசா, ரைசோபியம்

No comments:

Post a Comment