Monday 28 November 2016

Tamil-grammar

#தமிழ் #இலக்கணம் #அறிவோம்
#உவமைத்தொகை:
பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..
(எ.கா) கனிவாய்
மலரடி
'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
அதேபோல '#மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.
பெரும்பாலும் '#போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.
எ.கா
1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்
மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.
#உருவகம்:
உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா..அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.
அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.
அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.
'மலரடி' என்ற சொல்லை '#அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.
#விளக்கம்:
ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே '#மலர்முகம்'.இது உவமைத் தொகை.
இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்..(புரிதலுக்காகவே இவ்விளக்கம்)
அவ்வளவுதான் தோழர்களே..இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா..
#எடுத்துக்காட்டு:
#உவமைத்தொகை. #உருவகம்
மலர்முகம். முகமலர்
மலர்க்கை. கைமலர்
தாய்மொழி. மொழித்தாய்
கயல்விழி. விழிகயல்
அன்னைத்தமிழ். தமிழன்னை
மலர்விழி. விழிமலர்
#இரட்டைக்கிளவி:
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.
(எ.கா)
#சலசல, #கலகல
மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.
#அடுக்குத்தொடர்:
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.
(எ.கா)
#பாம்பு #பாம்பு,#வருக #வருக
மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளைத் தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.
#ஈறுகெட்ட #எதிர்மறைப் #பெயரெச்சம்:
ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா)
வாடா மலர்
தேரா மன்னன்
பொய்யா மொழி
பேசா வாய்
சிந்தா மணி
இதில் வாடா, தேரா, பொய்யா, பேசா, சிந்தா போன்றவை #ஈறுகெட்ட #எதிர்மறைப் #பெயரெச்சங்கள் ஆகும்.
'#' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.
எனவே எளிதாக கண்டறியலாம்.

No comments:

Post a Comment