Monday 28 November 2016

Tamil-grammar

#தமிழ் #இலக்கணம் #அறிவோம்
#எண்ணும்மை:
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.
(எ.கா)
அல்லும் பகலும்
காதலும் கற்பும்
அவனும் இவனும்
#உம்மைத்தொகை:
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.
(எ.கா)
அவன் இவன்
இரவு பகல்
இராப்பகல்
எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.அதுவே மரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.
#உரிச்சொற்றொடர்:
ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.
(எ.கா) மாநகரம்
அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம்.இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்..
1.சால 2.உறு
3.தவ 4.நனி
5.கூர் 6.கழி
7.கடி 8.மா
9.தட
மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக்கூடிய சொற்கள்.எனவே கேட்கப்படும் #உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் ஆரம்பிக்கும்..
(எ.கா)
தடக்கை
தவப்பயன்
உறுபடை
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்
1.வேர்ச்சொல்
2.பெயரெச்சம்
3.வினையெச்சம்
4.வினையாலணையும்
பெயர்
5.வினைமுற்று
6.தொழிற்பெயர்
1.தா
2.தந்த
3.தந்து
4.தந்தவன்
5.தந்தான்
6.தருதல்
1.செல்
2.சென்ற
3.சென்று
4.சென்றவன்
5.சென்றான்
6.செல்தல்
1.உண்
2.உண்ட
3.உண்டு
4.உண்டவன்
5.உண்டான்
6.உண்ணல்
1.காண்
2.கண்ட
3.கண்டு
4.கண்டவன்
5.கண்டான்
6.காணுதல்
1.கூறு
2.கூறிய
3.கூறி
4.கூறியவன்
5.கூறினான்
6.கூறுதல்

No comments:

Post a Comment