Tuesday 8 November 2016

CA_1

Group IV Exam Current affairs
01) ரியோ ஒலிம்பிக் போட்டியில், வெண்கலம் வென்ற சாக்க்ஷி மாலிக் ( மல்யுத்தம் ) Beti Padhao Beti Bachao திட்டத்தின் ஹரியானா மாநில தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
.
02) பிரதம மந்திரி சுகமாய பாரத் அபியான் { Prime Minister’s Sugamya Bharat Abhiyan } திட்டத்தின் படி பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள் ( ஹிந்தியில் திவ்யங் ) கற்றுக்கொள்ளும் வகையிலான e - library Sugamya Pustakalaya என்னும் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
.
03) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்களாதேஷ் மக்கள் மற்றும் வங்காள மொழி பேசும் அனைவருக்குமான வானொலி சேவை " ஆகாஷவாணி மைத்ரீ "ஐ கொல்கத்தாவில் தொடங்கி வைத்துள்ளார்.
.
04) மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டத்தின்படி ( Centre’s Regional Connectivity Scheme ) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மகாராஸ்டிரா, 10 விமான நிலையங்களை உருவாக்க மத்திய விமான போக்குவரத்து துறை மற்றும் விமான நிலைய ஆணையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
.
05) உலக கோப்பை கபடி போட்டி - 2016, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அக்டோபர் 07 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.
.
06) மகராஷ்டிரா மாநிலம், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தங்களுக்கென உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை ( The Maharashtra Protection of Internal Security Act ) உருவாக்கியுள்ளது.
.
07) ஹிந்தி இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு, K.K. பிர்லா பவுண்டேசன் வழங்கும் " வியாஸ் சம்மான் விருது " 2008ல் வெளிவந்த " Kshama " என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ள " சுனிதா ஜெயினுக்கு " வழங்கப்பட்டுள்ளது.
.
08) உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலாவது விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையத்தை { Animal Birth Control Centre (ABC) } மத்திய அமைச்சர் மேனகா காந்தி, கேதார்புரத்தில் ( டேராடூன் அருகே ) துவக்கிவைத்துள்ளார்.
.
09) The Ocean of Churn -- How the Indian Ocean Shaped Human History
எழுதியவர் --- சஞ்சீவ் சன்யால்
.
10) கோவா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தில் ( தெலுங்கானா ) குழந்தைகள் நீதிமன்றம் ( Children's Court ) துவங்கப்பட்டுள்ளது.
.
11) தெலுங்கானா மாநிலத்தில் தற்போதுள்ள 10 மாவட்டங்களை பிரித்து மொத்தம் 27 மாவட்டங்களாக உருவாக்கவும், புதிதாக 15 வருவாய் உட்கோட்டங்கள் மற்றும் 46 புதிய தாலுகாக்களை உருவாக்கவும் அம்மாநில அரசு வரைவு திட்ட அறிவிக்கை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment