Saturday 12 November 2016

Economic 12.11.16

பொருளாதாரம் - பொருளியலின் தன்மையும் எல்லையும் மற்றும் அடிப்படை பொருளியல் பிரச்சனைகள்

1. ............... என்ற பொருளியல் அறிஞரின் அறிவுரையைப் பின்பற்றியதால் ஜெர்மானிய பொருளாதாரம் வேகமாக மீட்சி அடைந்தது - லுட்விக் எராட்

2. உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து அமெரிக்க அரசு எந்த ஆண்டு மீட்சி பெற்றது - 1930

3. ............. என்பது வாழ்வு ஃ பிழைப்பாதாரப் பொருளாதாரம் ஆகும் - பழைமைப் பொருளாதாரம்

4. அங்காடிப் பொருளாதாரம் .......... என்றும் அழைக்கப்படுகிறது - தடையில்லா வாணிப பொருளாதாரம்

5. அங்காடிச் சக்திகளான அளிப்பு, தேவை மற்றும் விலைகள் ஆகியவைகளின் செயல்பாடுகளின் காரணமாக ........... தோன்றுகிறது - சுய அமைப்பு

6. ............ மட்டுமே அங்காடிப் பொருளாதாரத்தின் முக்கியச் செயல்பாடாகும் - இலாபநோக்கு

7. பெருவாரியான பொருளாதாரப் பிரச்சினைகள் ............. ஆல் தீர்மானிக்கப்படுகின்றன - அங்காடிச் சக்திகளால்

8. ............ பொருளாதாரச் செயல்பாடுகளில் குறைவான பங்கினையே பெற்றுள்ளது - அரசு

9. ஏற்றத்தாழ்வுகள் .............. ஐ வளர்ச்சியுறச் செய்கின்றன - முற்றுரிமையை

10. அங்காடிப் பொருளாதாரம் ................. , ............... ஐயும் ஊக்குவிக்கிறது - இயந்திரமயமாதல், தானியங்கி தன்மை

11. பொதுவுடைமைப் பொருளாதாரத்தில் ............ ஐ அரசே ஏற்றும், செயல்படுத்தியும் வருகிறது - உற்பத்திக்காரணிகளை

12. உற்பத்தி மற்றும் பகிர்வு சார்ந்த அனைத்து முடிவுகளையும் ............ தீர்மானிக்கிறது - மத்திய திட்டக்குழு

13. பொதுவுடைமைப் பொருளாதாரம் ................ அல்லது ............ என்று அழைக்கப்படுகிறது - திட்டமிட்ட பொருளாதார அமைப்பு அல்லது கட்டளை பொருளாதாரம்

14. பொதுவுடைமையின் அடிப்படைக் குறிக்கோள் ........... ஆகும் - சமூக நலம்

15. .......... சொத்துரிமை வரையறுக்கப்பட்டது - தனியார்

No comments:

Post a Comment